செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்
செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு, காவ்யா, விலை 320ரூ.
கோவில்களில் பெரும்பாலும் உற்சவ மூர்த்தியாக இருக்கும் செப்புத் திருமேனிகள் ஐம்பொன்னால் எவ்வாறு செய்யப்படுகின்றன? அவற்றில் எந்த உலோகங்கள் எவ்வளவு அளவில் சேர்க்கப்படுகின்றன என்பது போன்ற நுணுக்கமான செய்திகளை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது.
பல்லவர் காலம் முதல் தற்காலம் வரை செப்புத்திருமேனிகளை செய்வதற்கு கையாளப்படும் பாணிகளையும் இந்த நூல் தருகிறது. நடராசர் சிலையான ஆடவல்லானின் தத்துவம், ஆடற்கலை இலக்கணங்கள், சிலைகளில் இடம்பெறும் ஆடை, ஆபரண, ஆயுதங்கள் பற்றிய விவரம் ஆகிய அனைத்தும் ஒருசேர இந்த நூலில் காணப்படுகின்றன.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818