ஆதிசைவர்கள் வரலாறு
ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு, விலை 200ரூ.
ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பையும், ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பையும் விளக்கும் நூல். ஆதிசைவர்களின் வரலாற்றை இதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.
—-
தந்தை கோரியோ, சாகித்திய அகாதெமி, விலை 220ரூ.
19ம் நூற்றாண்டில் பாரிசு நகரத்தின் நாகரீக வாழ்வு யார் யாரை எப்பாடுபடுத்தியது என்பதை விளக்குவதே இந்நாவலின் நோக்கம். பாரிசு நகர மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நடையுடை, பாவனைகள், பொழுதுபோக்குகள் முதலியவற்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. நாவலாசிரியர் ஒனோரே தெபல்சாக் பிரெஞ்சு மொழியில் படைத்ததை எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ச. மதனகல்யாணி.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.