பாரதியார் பெருமை
பாரதியார் பெருமை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 143, விலை 60ரூ.
பாதியாரின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க., டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ.., வையாபுரிப்பிள்ளை, ம.பா.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதி பற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
பாரதியார் பற்றிய கருத்துப் பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு விழா நினைவாக மறுமுறை மலர்ந்துள்ளது.
நன்றி: குமுதம், 4/1/2017.