பௌத்தமும் தமிழும்
பௌத்தமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள், விலை 220ரூ.
தமிழகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குடன் இருந்த பவுத்த மதம், பின்னர் தடயமே இல்லாமல் அழிந்து போனது எப்படி என்ற வரலாற்றை பல இடங்களுக்குச் சென்று, கள ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர்.
தமிழகத்தில் பவுத்தம் எந்தெந்தப் பகுதிகளில் பரவி இருந்தது, பவுத்த மதத்தால் கிடைத்த நன்மைகள், பவுத்தர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர் அசோகர் பவுத்த மதத்தை எவ்வாறு தமிழகத்தில் பரப்பினார், ஜைனம் வைதீகம் ஆகிய மதங்களாலும் பவுத்தத்தில் ஏற்பட்ட பிளவாலும் பவுத்தம் தமிழகத்தில் எவ்வாறு அழிந்தது என்பது போன்றவைகள் விளக்கமாகத் தரப்பட்டு இருக்கின்றன.
காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாசநாதர் ஆலயம், காமாட்சியம்மன் கோயில் ஆகியவை ஆதியில் பவுத்த கோயில்களாக இருந்தன என்ற வியப்பான செய்தியும் இதில் காணப்படுகிறது.
நன்றி: தினத்தந்தி, 13/6/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818