யோகா அறிவியலும் ஆரோக்கியமும்
யோகா அறிவியலும் ஆரோக்கியமும், பி.கே. அய்யாசாமி, மணிமேகலைப் பிரசுரம், விலை 280ரூ.
கொரோனா காலத்தில் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது.
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த இந்த நூலின் ஆசிரியர், உடல் நலத்துக்கான அனைத்து ஆசனங்களின் செய்முறை, அதனால் ஏற்படும் பலனகள், ஆசனத்தின் போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள் ஆகியவற்றை அறிவியல் நோக்கிலும், பட விளக்கங்களுடனும் எளிமையாகத் தந்து இருக்கிறார்.
யோகாவின் வரலாறு, அதன் தத்துவம், ஆசனம் செய்யும்போது ஏற்படும் தவறுகள், அதற்கான தீர்வுகள், மூச்சுப் பயிற்சியான பிராணாயாமத்தின் முக்கியத்துவம், ‘ஓம்’ என்பதன் தத்துவ விளக்கம், மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி என்பவற்றையும் விளக்கமாகக் கொடுத்து இருக்கிறார். யோகாவின் பயன்கள் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள் தெரிவித்த கருத்துகளும் தொகுத்துத் தரப்பட்டு இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 13/6/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031374_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818