நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும்
நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, விலை 200ரூ.
ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்கள் பற்றியும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய ஆலயம், அந்த ஆலயம் அமைந்துள்ள இடம், அங்கு செல்வதற்கான வழி, ஒவ்வொரு கோவிலிலும் நடைபெறும் சிறப்பு பூஜைகள் போன்ற அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் தொகுத்துத்தரப்பட்டு இருக்கின்றன.
நட்சத்திரங்களுக்கு உரிய தமிழ் விளக்கம்,ஆங்கில மாதங்களுக்கு அந்தப் பெயர்கள் வந்த விதம், தமிழ் மாதங்களின் சிறப்பு, ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் ஆன்மிக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 300க்கும் மேற்பட்ட குறிப்புகளும் இந்த நூலில் தரப்பட்டு இருப்பதால், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இந்த நூல் மிக்க பயன் உள்ளதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 13/6/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818