வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4, பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 500ரூ.
சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய பரபரப்பான தகவல்களைக் கொண்ட நூல்களின் 4- வது பாகமாக இது வெளியாகி இருக்கிறது. இந்த புத்தகத்திலும் வீரப்பன் தொடர்பான திடுக்கிடும் செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன.
கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலைக்குப் பின் நடந்த நிகழ்வுகளும், இறுதியில் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதும் விவரிக்கப்பட்டு இருக்கிறது. வீரப்பன் ரூ.13 கோடி வைத்து இருந்தார் என்பதும் அவரால் கடத்தப்பட்ட நாகப்பா எவ்வாறு கொலையுண்டார் என்பதும் உள்பட பல சம்பவங்கள் ஆதாரபூர்வமாகவும், இவை தொடர்பானவர்களின் பேட்டிகளுடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
கையெறி குண்டு தயாரிக்க பயிற்சி அளிப்பதாக ஏமாற்றி வீரப்பன் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார் என்ற ஆச்சரியமான தகவலையும் இந்த நூல் தாங்கி இருப்பதால் படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 13/6/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031384_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818