காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்
காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு. நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.300, விலை ரூ.250.
காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது என்பதை பதிவு செய்யும் படைப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
சங்ககாலம் முதல் சமகாலம் வரை மருத்துவம் கடந்த வந்த பாதையை தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். தமிழ் மருத்துவத்தில் நாவிதர்களும், குயவர்களும் அளித்த பங்களிப்பு நூலில் பேசப்படுகிறது. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு அந்த நிலை மாறி சாதிரீதியாக மருத்துவ சேவைகள் தரம் பிரிக்கப்பட்ட உண்மைகளும் உரக்கக் கூறப்பட்டுள்ளன.
அந்தக் காலகட்டத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு லண்டன் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்றும் பெயர் இருந்தனவாம். இப்படி, அறியப்படாத பல சுவாரஸ்யமான தகவல்கள் நூல் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன.
ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இந்திய தேசம் இழந்தவை ஏராளம். ஒவ்வொரு துறையிலும் காலனி ஆதிக்கம் தனது கறைகளை விட்டுச் சென்றுள்ளது. அதுபோலத்தான் மருத்துவத் துறையிலும் இந்நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தை அழித்துவிட்டு அலோபதி சிகிச்சையை ஆங்கிலேயர்கள் வேரூன்றச் செய்தார்கள். இந்த வரலாற்று உண்மையை நூலின் ஒவ்வொரு பக்கமும் படம் பிடித்துக் காட்டுகிறது.
சுதந்திரத்துக்கு முன்பு நமது மருத்துவம் எப்படியிருந்தது என்பதை எடுத்துக்காட்டும் அதி முக்கிய நூல் இது.
நன்றி: தினமணி, 28/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027765.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818