காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு. நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.300, விலை ரூ.250. காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது என்பதை பதிவு செய்யும் படைப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் முதல் சமகாலம் வரை மருத்துவம் கடந்த வந்த பாதையை தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். […]

Read more

50 + இளமையோடு இருப்பது எப்படி?

50 + இளமையோடு இருப்பது எப்படி?, டாக்டர் சு.நரேந்திரன்,  கற்பகம் புத்தகாலயம், பக். 264, விலை ரூ.190. ‘வயதானாலும் இளமையாக இருக்கவே எல்லாரும் விரும்புகிறார்கள்’. இந்நூலில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் இளமையாக வாழ வழி சொல்லப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு வரக் கூடிய ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புகள் பலவீனமடைதல், மூட்டுகளில் பாதிப்பு, ஜீரணக் கோளாறுகள், பற்கள், கண்களில் பாதிப்பு உட்பட பல நோய்களுக்கான காரணங்களையும் அதற்கான தடுப்புமுறைகளையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது. எவற்றை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்? என்னவிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? […]

Read more