எதிரி உங்கள் நண்பன்
எதிரி உங்கள் நண்பன், பால்தசார் கிராசியன், தமிழில் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 80ரூ.
ஸ்பெயின் தேசத்து சாணக்கியன் பால்தசார் எழுதிய புத்தகம் இது. எப்பொழுதும் நிலைக்கக் கூடிய கருத்துக்களை உருவாக்குகிற கலைஞர்கள் ஒருசிலரே பிறக்கிறார்கள். அவர்கள் கண்ட தரிசனங்களை வெளியில் வைக்கிறார்கள்.
இந்த வாழ்க்கை நம் முன் வைக்கும் மாய விளையாட்டைச் சுலபமாகக் கையாள பால்தசார் சொல்லித் தருகிறார். இது சுய முன்னேற்ற நூல்லல்ல. உங்களின் ஆளுமையை, இருத்தலை உங்களுக்கே உணர வைக்கும் நூல். உலகமெங்கும் பேசப்பட்ட புத்தகம்.
தினசரி வாழ்வில் எதிர்படும் மனிதர்களைச் சுலபமாகப் புரிந்துகொள்ள, அவர்களை சாமர்த்தியமாகக் கையாள எளிய வழிகளைச் சொல்லித் தருகிறது இந்த நூல். நாம் எதிர்கொள்ளும் நீண்ட நெடிய வாழ்க்கைக்கான மிகச் சிறிய கையேடு இது.
பால்தசாரின் வாழ்க்கையே அதிக திருப்பங்கள் கொண்டது. கிறிஸ்துவ மத போதகராகத் தெரியவந்து, சொற்பொழிவாளராகி, வாழ்வியல் ஞானம் பற்றி புத்தகமெல்லாம் எழுதும் நிலைக்கு உயர்ந்தார். தத்துவவாதி நீட்சேவிற்கு பிடித்த புத்தகம்கூட இதுதான்.
தமிழ் மொழிபெயர்ப்பில் இடைஞ்சல் செய்யாமல் உதவுகிறார் சந்தியா நடராஜன்.
நன்றி: குங்குமம், 20/1/2017.