ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)
ஹைட்ரோ கார்பன் அபாயம், (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்), கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக். 288, விலை225ரூ.
உணவு, எரிபொருள் ஆகிய இரண்டுமே மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள். இவற்றில் பூமிக்குள் பொதிந்திருக்கும் ஹைட்ரோ கார்பனிலிருந்து தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
மிகப் பண்டைய காலத்தில் இருந்தே காவிரிப் படுகை விவசாய நிலமாகத் திகழ்ந்து வருகிறது. இப்படுகை நிலத்தைத் தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாமல் பாழாகிவிடும்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இயற்கைச் சூழலுக்கும், மனித வாழ்வுக்கும், விவசாயத்திற்கும் மாபெரும் அழிவை ஏற்படுத்தும் என்கிறார்.
இதில், அரசு துரப்பன தகவல்களையும், சில நாடுகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நடைமுறைகளால் அதில் பாதிப்பு உள்ளதா என்பதையும் சேர்த்திருந்தால், அதிக விழிப்புணர்வுக்கு உதவி இருக்கும்.
– மயிலை கேசி
நன்றி: தினமலர், 7/1/2018.