இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்
இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள், கோபால் மாரிமுத்து, ஐ.ஆர்.பி.எஸ், மணிமேகலைப்பிரசுரம், விலை 350ரூ.
40 இந்தியர்கள், குறிப்பாக சுதந்திரப்போராட்ட வீரர்கள் அரசியல்வாதிகளின் பேச்சுகள் மற்றும் வெளிநாட்டினரின் சிறப்பான, உத்வேகம் அளிக்கிற பேச்சின் தொகுப்புத்தான் இந்த புத்தகம். உரை ஆற்றியவர்களைப் பற்றிய குறிப்பு, அவர்கள் உரை ஆற்றிய தருணம் வரை தரப்பட்டு உள்ளது.
மொழி பெயர்ப்பினை நேர்த்தியாக, பொருள் சிதையாமல் செய்வதே ஒரு கலை. அதை நூலாசிரியர் நிறைவாக செய்து இருக்கிறார். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சுதந்திர போராட்டத்தில் வெவ்வேறு அணுகுமுறைகளை, கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், பரஸ்பரம் இருவரும் ஒருவர் மீது மற்றவர் கொண்டிருந்த மதிப்பு, மரியாதை கொண்டு இருந்தார்கள் என்பதற்கு சுபாஷ் சந்திரபோஸ் வானொலி உரை சான்று.
பாலகங்காதர திலகர் உரை, நாட்டுப்பற்றுக்கு இலக்கணம். இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு இஸ்லாமிய சீர்திருத்தவாதி சையத் அகமத்கான் உரை, சரியான வழிகாட்டி, “சகோதர, சகோதரிகளே” என சிகாகோ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை, உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த பேச்சின் ஒரு பகுதி இந்த நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம், முகமது நபிகளின் போதனைகளையும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம், முகமது நபிகளின் போதனைகளையும் இடம் பெறச் செய்திருப்பது பாராட்டுக்கு உரியது. இந்த புத்தகம், எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு அறிவுப்பெட்டகம்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818