ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள்
ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள், தமிழில் எஸ்.ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ.
ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை புதிய முறையில் எவ்வாறு அணுகி அவற்றுக்குத் தீர்வு காண்பது என்பது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் ஆலோசனைகள் வழங்குவதில் புகழ்பெற்ற தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமர்த்தியின் கருத்துகள் ஏராளம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
ஒரு சில இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள் என்று பல இடங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட சிந்தனைத் துளிகள் தொகுக்கப்பட்டு, அனைவரும் படிக்கும் வகையில் எளிய முறையில் தரப்பட்டு இருக்கின்றன. மனித குலத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்- ஒவ்வொருவருக்கும் எந்த விதமான கல்வியை அளிக்க வேண்டும்? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? என்பது போன்ற பல தலைப்புகளில் தரப்பட்டுள்ள ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பதில்கள், சிந்தனையைத் தூண்டும் என்பதோடு அவை அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினத்தந்தி 3/7/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818