கடற்கரை காவியம்
கடற்கரை காவியம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 15, விலை 150ரூ.
கடலோரக் காவியம் தமிழ் திரையுலகில் நிலவும் சிக்கல்களையும் அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருளையும் புதுமைகளையும் சித்திரித்து, சினிமா கலைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, காதல் பிரச்னைகளை அன்னை அருளால் தீர்த்துவைத்து வெற்றியடையச் செய்வதை சித்திரிக்கும் நாவல் இது.
நன்றி: குமுதம், 21/12/2016.
—-
எட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், பக். 152, விலை 200ரூ.
பல்வேறு கலைஞர்களின் கவிதைகள் ஒரு குடையின் கீழ் தரப்பட்டுள்ளன. பலவித பாடுபொருள்கள், பலதரப்பட்ட சிந்தனைகள், சமகால நிகழ்வுகள், சமூக விழிப்புணர்வு, மனிதநேயம், தன்னம்பிக்கை என்று கவிமலர்கள் மலர்ந்துள்ளன. மரபும் புதுக்கவிதையும் சங்கமிக்கும் தளமாக விளங்குகிறது.
நன்றி: குமுதம், 21/12/2016.