வீழ்வதற்கல்ல வாழ்க்கை
வீழ்வதற்கல்ல வாழ்க்கை, லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லேனா தமிழ்வாணன் எழுதிய வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு.
காலை முதல் இரவு வரை நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் எளிமையான முறையில், இனிய நடையில் சொல்கிறார். தாயைப்போல நன்னடத்தையைக் கற்றுக் கொடுக்கிறார்.தந்தையைப்போல வழிகாட்டுகிறார். ஆசிரியர்களைப்போல ஆலோசனை சொல்கிறார்.
‘நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்கள் அபாரமானவை. அவற்றை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது நழுவ விடக்கூடாது.” “நெல்லை விதைத்துவிட்டு பாராதிருந்தால் அதில் புல் மண்டியிட வாய்ப்பு இருக்கிறது.” “வாழ்வில் தனிப்பயணம் ஒன்றுதான். அதுவரை அனைவரோடும் இணைந்தும், இசைந்தும்தான் பயணப்பட வேண்டும்” என்பன போன்ற கருத்துகள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017.