கோடிக்கால் பூதம்
கோடிக்கால் பூதம், அ.உமர் பாரூக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.150.

கரோனா இரண்டாம் அலை தனிநபர் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைத் துல்லியமாக சித்தரிக்கும் நாவல். டேவிட், மைக்கேல், குமார் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல், கரோனா தொற்று உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் கூறுகிறது.
கேரளாவில் மதபோதகர் பணி செய்யும் டேவிட் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் சொந்த ஊரில் தங்கியிருக்க, கேரளாவில் உள்ள பெரிய போதகர் அவனை உடனே கேரளாவுக்கு வந்து பணியில் சேரும்படி கட்டளையிடுகிறார். கேரளாவில் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் நிலையில், தமிழக எல்லை வரை நண்பன் மைக்கேலின் இருசக்கர வாகனத்தில் செல்லும் டேவிட், தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பிவிடுகிறான்.
லேப் டெக்னாலஜி படித்த குமார், கரோனா தீ நுண்மி பரிசோதனைக்கான சளி மாதிரிகளை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று சேகரிக்கிறான். கரோனா பரிசோதனைக்கான பிசிஆர் டெஸ்ட்டில் உள்ள குளறுபடிகள், தவறுகள் அவனுக்குச் சோர்வை ஏற்படுத்துகின்றன. ஒரு நாளில் 30 பேரிடம் இருந்து பரிசோதனைக்கான சளி மாதிரிகளை சேகரிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். முடியாத நிலையில் தவறு செய்கிறான். கரோனாவால் பாதிக்கப்பட்டு மைக்கேல் இறந்து போகிறான்.
மருத்துவம் வணிகமயமாக்கப்பட்ட சூழலில், கரோனா தொற்றுக்கான மருத்துவத்திலும் அதன் பாதிப்புகள் படுமோசமாக இருப்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்நாவல் சித்தரிக்கிறது.
நன்றி: தினமணி, 27/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818