மாலுவின் டயரி

மாலுவின் டயரி (சிறார், பெரியவர்களுக்கான கருத்துக் களஞ்சியம்), ஞாநி, ஞானபாநு பதிப்பகம், பக். 160, விலை 225ரூ.

எழுத்தாளர் ஞாநி எழுதியுள்ள மாலுவின் டயரி 10 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவருக்கான நூல். இன்னொரு பார்வையில், அது எல்லா வயதினருக்குமான நூல்.

ஜெனரல் பிக்ஷன் என்ற வகைப்பாட்டில் உலக அளவில் மிகச் சில நூல்களே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் இதுவே முதல் ஜெனரல் நூலாக வந்துள்ளது. எழுத்தாளனே ஒரு பாத்திரமாக தன் நூலில் வலம் வருவதே ஆத்தோகேர் வடிவமாகும்.

மாலுவின் டயரி இப்படி அபூர்வமான இரு இலக்கிய வடிவங்களில் அமைந்திருந்தாலும், வாசிக்க இலகுவான எளிய நூலாகும்.

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழில் வெளியானவற்றின் தொகுப்பே இந்நூல். எல்லா பக்கங்களும் வண்ணத்தில், சித்திரங்களுடன் வெளியாகி இருப்பது அனைவரையும் கவரும்

நன்றி: தினமலர், 19/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *