மாத்தி யோசி கவிதைகள்
மாத்தி யோசி கவிதைகள், மில்டன், விலை 89ரூ
இளம் கவிஞர் மில்டன் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கிறார் காந்தி. இன்றோ அந்தக் கிராமங்களில் தான் வாழ எவருமில்லை, உன் தலைமுறையை மருத்துவனாக்கு
பொறியாளனாக்கு
அதற்கு முன் சாதி வெறி இல்லா மனிதனாக்கு
பிறருக்கு உதவும் மனிதநேயனாக்கு
என்பன போன்ற நெஞ்சை அள்ளும் கவிதைகள்.
மறுக்கப்பட்ட வாழ்வை அளித்தவன் நீ
மறைக்கப்பட்ட வரலாற்றை உரைத்தவன் நீ
வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்புச் சட்டை நீ
எந்த வேள்வியையும் சட்டை செய்யாத நெருப்புச் சாட்டை நீ
என்று பெரியாரைப் பற்றி அவர் பாடும் கவிதை வரிகள் நம்மை பெருமிதம் கொள்ள வைக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 15/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818