முகவரியில்லா முகங்கள்
முகவரியில்லா முகங்கள்,கவி.தங்க.ஆரோக்கியதாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.
25 சிறுகதைகள் கொண்ட தொகுதியாக வழங்கப்பட்டுள்ளது. இது தனது முதல் முயற்சி என்று நூலாசிரியர் கூறியுள்ளது நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு தேர்ந்த எழுத்தாளர் போல யதார்த்த நடையில், தான் சந்தித்த முகம் தெரியாத சாதாரண மனிதர்கள் பற்றிய நிகழ்வை கதையாக வடித்துள்ளார்.
சில கதைகள் சென்னையில் நம் கண் முன் நடந்த சம்பவங்களை நினைவு கூறுகின்றன. சோகம், வறுமை என பிழிந்துவிடுகிறார். ஒவ்வொரு சிறுகதையும் சில இடங்களில் நடந்த சிறுகதைகளுக்கான போட்டிகளில் பரிசு பெற்றுள்ளன. அது பற்றிய தகவலையும் கதையின் முடிவில் குறிப்பிட்டு இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027230.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818