மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு
மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு, கா.ந.கல்யாணசுந்தரம், கவிஓவியா பதிப்பகம், விலைரூ.150
புறநானுாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடல்களுக்கு எளிய தமிழில் மூன்று அடி கவிதைகளாக வழங்கியுள்ள நுால். தேவைக்கேற்ப ஓவியங்களை அமைத்தும் சிறப்புற விளங்குகிறது.
திணை, துறை விளக்கங்கள், புறநானுாற்று செய்யுள்களில் பாடப்பட்ட பெருஞ்சேரல் இரும்பொறை, கிள்ளி வளவன், அதியமான், குமணன், திருமுடிக்காரி, பேகன், வேள்பாரி, அறிவுடைநம்பி, ஓரி, கோப்பெருநள்ளி, ஆய், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கரிகால் பெருவளத்தான், பள்ளி துஞ்சிய நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி, சேரல் இரும்பொறை போன்ற மன்னர்களின் வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்
நன்றி: தினமலர், 28/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818