நான் ப்ரம்மம்

நான் ப்ரம்மம்,  ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், தமிழில்: சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.208, விலை ரூ.250.

“நான்’ எனும் தேடலே கேள்வியாக மனதினுள் வளர்ந்து நிற்கும்போது அதற்கான தேடலும் பதிலும் அவசியமாகிறது. ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ் தமது ஆன்மிக சொற்பொழிவுகளால் பலரின் மன இருளைப் போக்கி ஆன்மபலத்தைப் பெருக்கும் கருவியாக இருந்தவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களுமே ஒரு நூலாக (முதல் பகுதி) வடிவெடுத்திருக்கிறது.

“”கடவுள் ஏன் என்னை இவ்வாறு படைத்தார்?”

என்பது கேள்வி. அதற்கு மஹராஜ் அவர்கள் அளித்த பதில், “”எந்தக் கடவுளைப் பற்றி நீ பேசுகிறாய்? கடவுள் என்பது என்ன? நீ இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான ஆதாரம்… “நான்’ என்பதும் கடவுள். தேடுதல் என்பதும் கூட கடவுள். தேடுவதன் மூலம் நீ மனமோ, உடலோ அல்ல என்று அறிவாய்…” என்பதாக அவர் பதில் சொல்கிறார். அவருடைய பதில்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன.

மற்றொரு கேள்வி: “”முடிவான நிலையில் மகிழ்ச்சி என்பது இருக்காதா?” பதில்: “”துக்கமும் இருக்காது. சுதந்திரம் மட்டுமே இருக்கும். சந்தோஷம் ஏதாவது ஒன்றைச் சார்ந்து இருக்கிறது. அது தொலையலாம். எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரமாக இருப்பது என்பது எதையும் சார்ந்தது அல்ல. அது தொலையாது. துன்பத்திலிருந்து சுதந்திரம் அடைவதற்குக் காரணம் எதுவும் கிடையாது. அதனால் அதை அழிக்க முடியாது!”

நம் மனத்தில் எழும் கேள்விகளுக்கான விடையாக இந்நூல் அமைந்திருப்பது, ஆன்மிகப் அன்பர்களுக்கு அமுதம்!

நன்றி: தினமணி, 25/7/2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *