நமக்குள் சில கேள்விகள்
நமக்குள் சில கேள்விகள், வெ.இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வார, மாத இதழ்களில் கேள்வி பதில் பகுதி இடம் பெறுகிறது. அந்த இதழின் ஆசிரியரோ அல்லது பிரபலமானவர்களோ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். இது வாசகர்களின் சிந்தை கவர்ந்த பகுதியாகவே திகழ்ந்து வருகிறது.
பெரும்பாலும் கேள்வி வாசகர்களால்தான் கேட்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சளாருமான வெ.இறையன்பு கேள்விகளை தானே உருவாக்கி அதற்குத் தக்க பதில்களை அளித்து வந்தார். ராணி வார இதழில் 100 வாரங்கள் தனது கேள்விகளால் வேள்வி நடத்தினார். அதில் ஒரு பகுதி கேள்வியும் நானே பதிலும் நானே என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. இதன் மீதிப் பகுதி நமக்குள் சில கேள்விகள் என்ற தலைப்பில் இப்போது புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், வாழ்வியல் சிந்தனைகள், நேர மேலாண்மை, ஆன்மீகம், மருத்துவம், வரலாறு, அறிவியல் என பல்வேறு துறைகள் சார்ந்த கேள்விகளுக்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் பதில் அளித்துள்ளார். அறிவுத் தாகத்தைத் தணிக்கும் கருத்துகள் கொண்டது இந்நூல்.
நன்றி: தினத்தந்தி, 4/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818