நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது
நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது, ஹாருகி முரகாமி, தமிழில் ஜி.குப்புசாமி, வம்சி புக்ஸ், விலை 170ரூ.
முரகாமி… ஜப்பான் மட்டுமில்லை, அகில உலகமே அவரது எழுத்தின் மீது கவனம் வைக்கிறது. அவரின் ஆறு சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இந்தத் தொகுப்பில். வலிமையான கதைக்களன் என்று எதுவும் இல்லை. மெல்லிய உரையாடல்களில் சித்திரம் விரிகிறது. அவரது உரையாடல்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை.
முதல் வாசிப்பிலேயே கிடைக்கக்கூடிய அபூர்வ அழகும் சாத்தியப்படுகிறது. அதே நேரத்தில் மறுவாசிப்பின் அவசியமும் நேரிடுகிறது. தத்துவ விசாரிப்புகள் என்றெல்லாம் போய்விடாமல் பேசுவதையெல்லாம் நுட்பமாக்கிவிடும் சாதுர்யம், மருகாமியின் எழுத்துக்களில் கைவருகிறது.
பழம்பெருமைகளை விட்டுவிட்டு, ஜப்பானிய இளைஞர்களின் வாழ்க்கையை எழுதிக்கொண்டே போகிறார். அது உலகின் அத்தனை இளைஞர்களுக்கும் சரிப்பட்டு வருவதுதான் ஆச்சரியம்.
நன்றி: குமுதம், 18/7/2017.