பாஞ்சாலி
பாஞ்சாலி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 425ரூ.
ராமாயணமும், மகாபாரதமும், இந்த நாட்டில் இந்து பெருமக்களால் போற்றப்படுகின்ற பெருங்காப்பியமாகும். இந்து மத சம்பிரதாயங்கள், சடங்குகள், சாஸ்திரங்கள், கற்பு நெறி, நடை உடை பாவனைகள் அனைத்தும் இந்த இரு இதிகாசங்களில் இருந்து பிறந்தவையாகவே கருதப்படுகிறது.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருட்களையும் தரவல்லது மகாபாரதம். மகாபாரத கதாபாத்திரங்களாகிய துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரை தனித்தனி பாத்திரங்களாகப் பிரித்தெடுத்து ஏற்கனவே நூலாக்கித் தந்தவர் எழுத்தாளர் எஸ். விஜயராஜ்.
அவர் இப்போது பாஞ்சாலியின் வரலாற்றை இந்த நூலில் சுவைபட விளக்கியுள்ளார். இரு பங்காளிகளுக்குள் நடக்கும் சண்டையில் பாஞ்சாலி படும் வேதனைகளையும், துன்பங்களையும் விவரித்து நம் கண்களை குளமாக்குகிறார்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.