பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 150ரூ.
தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர்களில் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு தனித்த இடம் உண்டு. 24 வயதில் பாடல் எழுதத் தொடங்கிய அவர் 29 வயதில் மரணத்தைத் தழுவினார். 5 ஆண்டு காலத்தில் 57 திரைப்படங்களுக்கு சுமார் 201 பாடல்களை எழுதியுள்ளார்.
காதல் பாடல்களில் கண்ணியத்தையும், பக்திப் பாடல்களில் பகுத்தறிவையும், சமூகப் பாடல்களில் பொதுவுடைமை கருத்துக்களையும் புகுத்தியவர். ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’, ‘தூங்காதே தம்பி தூங்காதே – நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ ,‘திருடாதே பாப்பா திருடாதே’ போன்ற எண்ணற்ற பாடல்கள் காலத்தை வென்ற கருத்துள்ள பாடல்கள்.
அந்தப் பாடல்களையெல்லாம் எழுத்தாளர் கே. ஜிவபாரதி காதல், இல்லறம், மழலை போன்ற தலைப்புகளில் சிறப்பாகத் தொகுத்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.