தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்
தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், முனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், திருராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், விலை 200ரூ.
தொல்காப்பியம், தமிழில் கிடைத்துள்ள மிகவும் தொன்மையான இலக்கண நூலாகும். தமிழ் அமைப்பையும், பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் பெருமையுடைய நூலாகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படித்து நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அதில் உள்ள கலைச்சொற்களுக்கு முனைவர் இரா.இளங்குமரனார் அழகிய முறையில் பொருள் விளக்கம் அளித்துள்ளார்.
உண்மை என்ற சொல்லை விளக்குகையில், உள்> உண்>உண்மை. இதற்கு “உள்ளத்தே உள்ளதாம் தன்மை உரை, உண்மையாம்” என்று விளக்கம் அளிக்கிறார். அமரர் என்ற சொல்லை விளக்குகையில் அமர்+அர்=அமரர். அமர் என்றால் போர், அமரர் என்றால் போரில் விழுப்புண்பட்டு இறந்தவர் என்று விளக்கம் தருகிறார். இத்தகைய விளக்கங்களை நூல் முழுக்கக் காணலாம்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.