தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள்
தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 270ரூ.
மறைந்த எழுத்தாளர் தமிழ்வாணன் எந்த பொருள் பற்றியும், மனதைத் தொடும் விதத்தில் எழுதுவதில் வல்லவர். அவருடைய தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் 2ம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. மொத்தம் 59 கட்டுரைகள் உள்ளன. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் படிக்க வேண்டிய கட்டுரைகள்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.
—-
வர்ம மருத்துவ கையடக்கம், மருத்துவர் த. இராஜேந்திரன், வர்ம அறிவியல் ஆய்வு மையம், பவர் பப்ளிகேஷன்ஸ், விலை 390ரூ.
உலக மக்களின் பிணிகளைத் தீர்ப்பதற்கு எளிய ஒன்றான வர்மக்கலை என்பதை உணர்ந்து, இந்நூலில் 108 வர்மங்களை தொகுத்து அதன் தலம், குணம், பின்விளைவு, மருத்துவம் செய்ய வேண்டிய கால அளவு, பயன்கள் அனைத்தையும் ரத்தினச் சுருக்கமாய் தொகுத்தளித்திருக்கிறார் மருத்துவர் த. இராஜேந்திரன். வர்ம தூண்டல் மருத்துவ வல்லுனர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.