ஜெயகாந்தனின் பர்ணசாலை
ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ.
சிறுகதை, நாவல் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர், ஜெயகாந்தன். நண்பர்களால் அவர் ‘ஜே.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஜெயகாந்தனின் கே.கே. நகர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடி அடிக்கடி கூடி விவாதிப்பது வழக்கம். அந்த இடத்தை ‘பர்ணசாலை’ என்று அழைத்தனர்.
ஜெயகாந்தனோடு 50 ஆண்டுக் காலம் பழகிய எழுத்தாளர் நவபாரதி, அவரோடு பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவரிடம் இருந்து பெற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் அவரது சிறுகதைகள் குறித்தும், நாவல்களில் இந்திய சமூக – ஆன்மிக யதார்த்தம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.
எழுத்துலக மன்னராகத் திகழ்ந்த ஜெயகாந்தனை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.