வேலூர் மாவட்ட வரலாறு
வேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.
இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.
—-
சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ.
சிவத்தலங்கள் பலவற்றுள் ஜோதிர்லிங்கத் தலங்கள் என்று 12 உள்ளன. அவற்றில் 2 தமிழ்நாட்டில் உள்ளன. மற்ற 10 தலங்களும் வடநாட்டில் உள்ளன. அந்த தலங்கள் எங்கே இருக்கின்றன, எந்த வழியாக போகலாம், தலங்களின் பெருமைகள் ஆகியவற்றை இந்த நூல் விளக்குகிறது.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.