பேலியோ டயட்
பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக். 175, விலை 150ரூ.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, தகுந்த பின்னணியை விளக்கும் நூல். அதாவது முறையான உணவு வழக்கத்தைக் கையாண்டால் எடை குறைவதோடு உடல் நலனும் மேம்படும் என்பதைச் சொல்லும் நூல்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/5/2016.
—-
நோய்களும் தடுக்கும் உணவு முறைகளும், உமா பாலகுமார், குமுதம், பக். 128, விலை 120ரூ.
ஒரு நோயைக் குணப்படுத்த மருத்துவ முறைகளுடன் உணவு உண்ணும் முறையையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கற்றுத்தரும் நூல். மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட பொதுவான நோய்களிலிருந்து விடுபட உதவும் உணவு முறைகளை எளிய நடையில் சுருக்கமாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அவற்றை சமைப்பதற்கான டிப்ஸ்களையும் தந்துள்ளது சிறப்பு.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/5/2016.