பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு
பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு, தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம், பக். 253, விலை ரூ.270.
பள்ளு இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களில் மருத நில மக்கள், மள்ளர்களின் வீரம், பெருமை, ஆட்சி அதிகாரம், வரலாற்று கதைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த மள்ளர்கள் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களால் பட்டியலினத்திற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சமூக மக்களின் வாழ்வியல் முறைகள், குலப் பெயர்கள், குடும்ப முறைகள், அவர்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை எளிய தமிழில் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்.
மன்னர் காலகோயில் கல்வெட்டுகளில் மள்ளர்களின் பெருமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நூல் குறிப்பிடுகிறது.
விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட மள்ளர்கள் நடத்திய இந்திர விழா, மழை வழிபாடு போன்றவை பற்றியும், தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் மள்ளர்களுக்கு அளிக்கப்பட்ட முதல் மரியாதை குறித்தும்உரியஆதாரங்களோடு நூல் விளக்குகிறது. பிரிந்து கிடந்த ஆறுமள்ளர் குலத்தினர் தேவேந்திரக் குல வேளாளர்களாக ஒருங்கிணைந்தன் முக்கியத்துவம், அதன் வரலாற்று பின்னணி ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மள்ளர்கள் குறித்த முக்கியமான வரலாற்றுப் பதிவு.
நன்றி: தினமணி, 6/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818