பத்மினி
பத்மினி, டி.ராமகிருஷ்ணா, தமிழில் பேராசிரியர் சிவ.முருகேசன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ.
ஆங்கில நாவல் எழுதிய முதல் தமிழர்
தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவை இணைந்திருந்த பழைய சென்னை மாகாணத்தில், 1854-ம் ஆண்டில் பிறந்தவர் டி.ராமகிருஷ்ணா. ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் தமிழர் இவர்தான். “பத்மினி” ஓர் இந்தியக் காதல் கதை” என்ற இந்த நாவலை 1903-ம் ஆண்டில் (அதாவது 114 ஆண்டுகளுக்கு முன்) அவர் எழுதினார். அதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சிவ.முருகேசன்.
விஜயநகர அரசரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றும் சலுவா என்பவன், பேரழகி பத்மினியை காதலிக்கிறான். அரசு குடும்பக் கொலையில் உயிர் தப்பிய சென்னப்பா மீது பத்மினிக்கு காதல். சுவையாகச் செல்கிறது இந்த முக்கோணக் காதல் கதை.
நன்றி: தினத்தந்தி, 6/12/2017.