பழைய பேப்பர்
பழைய பேப்பர், கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விலை 225ரூ.
தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், செய்திகள் சேகரிப்பதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை.
அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிரூபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது. இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன்.
சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், செய்தியாளர்களுக்கு கற்றுத் தரும் பாடங்களாகிவிடுகின்றன.
ஒரே ஓட்டத்தில் படித்து முடித்துவிடலாம். செய்தி சேகரிப்பின் அத்தனை சூட்சுமங்களும் புரிந்துவீடுகிறது. இதழியல் மாணவர்களுக்கு முட்டுமில்லை. எல்லோருக்குமான புத்தகம். பெயர்தான் ‘பழைய பேப்பர்’. விஷயங்கள் இன்றைக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியவைதான்.
நன்றி: குங்குமம், 16/9/2016.