பழைய பேப்பர்

பழைய பேப்பர், கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விலை 225ரூ. தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், செய்திகள் சேகரிப்பதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை. அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிரூபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது. இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன். சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், […]

Read more

குறளறம்

குறளறம், திருவள்ளுவர் பதிப்பகம், விழுப்புரம், பக். 240, விலை 150ரூ. திருக்குறள் வெண்பாவால் ஆனது. அதை விருத்தப்பாவில் விளக்கம் அளித்து அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர். முயற்சியும் புதிது. அவர்தரும் கருத்துரைகளும் புதிது. வாழ்க்கை நிலையற்றது என்று வேதனைப்படுவோர் கூட இவரின் விளக்கத்தால்  உற்சாகம் அடையலாம். திருமூலர், வள்ளலார், வேதாத்ரி, மகரிஷி ஆகியோரின் தாக்கம் நூலில் அதிகம். 1330 குறளையும் எளிதாகப் படிக்க இந்நூலை ஒருமுறை வாசித்தால் போதுமானது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/8/2014.   —- வரலாற்றில் விழுப்புரம் […]

Read more

நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, பக். 110, விலை 70ரூ. தமிழகத்தின், ஏழாவது அதிசயம் என்று, கானாடுகாத்தான் ஊரில் உள்ள செட்டிநாட்டு ராஜா அரண்மனையை படங்களுடன் அதிசயிக்கும் நூலாசிரியர், சொக்கலிங்கம் புதூர், ஆத்தங்குடி, காரைக்குடி, குன்றக்குடி முதலிய ஊர்களின் வாயிலாக செட்டிநாட்டின் முழுச் சிறப்பையும் சுருக்கமாய்த் தந்துள்ளார். பல வாழ்வியல் நூல்களை எழுதி, இன்று முழுமையுடன் வாழ்ந்து வரும், நூலாசிரியரின் இப்பயண நூல் நகரத்தார் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 20/4/2014.   […]

Read more