வரப்பு

வரப்பு, அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், விலை 75ரூ. தொழில் அதிபர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தார்வம் மிக்கவர். சுய முன்னேற்ற நூல்கள் எழுதி புகழ்பெற்றவர். இப்போது 15 சிறுகதைகள் கொண்ட “வரப்பு” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கதையிலும், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி இருப்பது, பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- பனையாளியும் மாடமாளிகையும், சாமி வெளியீடு, விலை 60ரூ. நூலாசிரியர் ஆத்மா கே. இரவி, ஓவியரும்கூட. எனவே தன் நாவலுக்கு உரிய படங்களை அவரே வரைந்துள்ளார். எனவே, […]

Read more

கொண்டாடத்தான் வாழ்க்கை

கொண்டாடத்தான் வாழ்க்கை,  அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. மனித பிறவி எவ்வளவு இனிமையானது. அதை எப்படி கொண்டாடினால் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு சில கருத்துக்களையும், வழிமுறைகளையும் 34 அத்தியாயங்களில் தொகுத்து அளித்துள்ளார் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பளிச் பளிச் என்று சொல்லப்படும் குட்டிக் கதைகள் நூலை சுவாரஸ்யமாக ஆக்குகின்றன. நகைச்சுவையையும் ஒரு படிப்பினையையும் இணைத்தே சொல்லப்படும் அந்தக் கதைகள் தனி விறுவிறுப்பைத் தருகின்றன. படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் ஜனரஞ்சக நடையில் எல்லோரது மனதைத் […]

Read more

நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, பக். 110, விலை 70ரூ. தமிழகத்தின், ஏழாவது அதிசயம் என்று, கானாடுகாத்தான் ஊரில் உள்ள செட்டிநாட்டு ராஜா அரண்மனையை படங்களுடன் அதிசயிக்கும் நூலாசிரியர், சொக்கலிங்கம் புதூர், ஆத்தங்குடி, காரைக்குடி, குன்றக்குடி முதலிய ஊர்களின் வாயிலாக செட்டிநாட்டின் முழுச் சிறப்பையும் சுருக்கமாய்த் தந்துள்ளார். பல வாழ்வியல் நூல்களை எழுதி, இன்று முழுமையுடன் வாழ்ந்து வரும், நூலாசிரியரின் இப்பயண நூல் நகரத்தார் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 20/4/2014.   […]

Read more