குறளறம்

குறளறம், திருவள்ளுவர் பதிப்பகம், விழுப்புரம், பக். 240, விலை 150ரூ. திருக்குறள் வெண்பாவால் ஆனது. அதை விருத்தப்பாவில் விளக்கம் அளித்து அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர். முயற்சியும் புதிது. அவர்தரும் கருத்துரைகளும் புதிது. வாழ்க்கை நிலையற்றது என்று வேதனைப்படுவோர் கூட இவரின் விளக்கத்தால்  உற்சாகம் அடையலாம். திருமூலர், வள்ளலார், வேதாத்ரி, மகரிஷி ஆகியோரின் தாக்கம் நூலில் அதிகம். 1330 குறளையும் எளிதாகப் படிக்க இந்நூலை ஒருமுறை வாசித்தால் போதுமானது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/8/2014.   —- வரலாற்றில் விழுப்புரம் […]

Read more

தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சைப் பெரியகோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடித் தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 160ரூ. மழைநீர் சேமிப்பில் முன்னோடியாகத் திகழ்கிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எடுப்பிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில். இந்த ஆலயம் அமைந்துள்ள 3,32,000 சதுர அடி நிலப்பரப்பில் மாதம் மும்மாரி பொழிந்த தண்ணீரெல்லாம் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு நான்கு நீர்த்தாரைகளின் வழியே சென்று ஆலயத்தின் வடபுறம் உள்ள சிவகங்கைக் குளத்தை சென்றடையுமாம். இது சிவபெருமானின் திருமுடிமீது பொழியும் கங்கை நீராகக் கருதப்பட்டதாம். இப்படிச் சேகரிக்கப்பட்ட தூய மழைநீர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரைகூடத் தஞ்சாவூரின் […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-8.html இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா? -ஜனகன். நன்றி: […]

Read more