சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள்

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள், மண்னை சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 50ரூ.

அறிஞர் அண்ணாதுரை ஆற்றல் மிகு பேச்சாளர். மேடையில், ‘மைக்’கின் முன்னே வந்து, அண்ணா பேச ஆரம்பித்தால், பண்டிதர் முதல், பாமரர் வரை மயங்குவர்.

அவரது பேச்சை கேட்க, சில சமயங்களில் கட்டணம் வைத்தனர். அப்படி இருந்தும் மக்கள் பணம் கட்டி, பெருமளவில் பேச்சைக் கேட்க வந்தனர். மேடையில் பேசும் போதும், ஏடுகளில் கட்டுரைகள் எழுதும் போதும், சொல்ல வந்த கருத்தை எளிதில் விளக்குவதற்காக எத்தனையோ சின்ன சின்ன கதைகளை சொல்லியிருக்கிறார்.

அந்த கதைகளை எல்லாம் இயன்றவரை தொகுத்து மன்னை சம்பத் உங்களுக்கு வழங்கி இருக்கிறார். படித்து இன்புறுங்கள்!

– எஸ்.குரு.

நன்றி: தினமலர், 2/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *