சிற்பியின் படைப்புத்தளம்
சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ.
கவிதை உலகில் தனியிடம் பெற்றவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் சிற்பி படைத்த கவிதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த சிற்பிபின் படைப்புக்கலை, சிற்பி மரபும் புதுமையும் ஆகிய இரண்டு நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக இது வெளியிடப்பட்டு இருக்கிறது.
மண் சார்ந்த கற்பனைகளுடனும், மக்கள் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் சிற்பி எழுதிய கவிதைகளை திறனாய்வு செய்து பல எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இலக்கியத் தரத்துடன் மிளிர்கின்றன. அத்துடன் மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றை அலசி ஆராயும் நோக்கிலும் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள், கவிதைகளை நேசிப்பவர்களை நிச்சயம் கவரும்.
நன்றி: தினத்தந்தி, 24/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818