சிந்திக்க வைக்கும் தெனாலிராமன் கதைகள்

சிந்திக்க வைக்கும் தெனாலிராமன் கதைகள், பக்தவச்சலம் வேணுகோபால், அமராவதி வெளியீடு, விலை 140ரூ. திறமையும், சிந்தித்து செயல்படும் நுண்அறிவும் இருந்தால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பது தெனாலிராமன் கதைகள் மூலமாக நாம் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

மதுரை நகரக் கோயில்கள்

மதுரை நகரக் கோயில்கள், டி.வி.எஸ். மணியன், அமராவதி வெளியீடு, பக். 200, விலை 130ரூ. மதுரை நகரத்திற்குள் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றி கூறும் நூல். மதுரைக் கோயில்களை காண விரும்புவோருக்கும் ஆராய விரும்புவோருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டி. கோயில்களை அறிமுகம் செய்யும் அதே வேளையில் கோயில் வரலாறு, கோயில் சார்ந்த மன்னர்கள் வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, புராணப் பின்புலங்கள் என்று அனைத்தையும் நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்,

வரலாற்றில் வன்னியர் மகாவம்சம், ந. இறைவன், வன்னியகுல சத்திரிய மகாசங்கம், பக். 488, விலை 450ரூ. பிரமனின் தோளில் இருந்து வலிமையுடன் தோன்றிய ஷத்திரியர்கள், உலக ஒழுங்குமுறையை காக்கப் பிறந்தவர்கள் என்ற கருத்து அழுத்தமாக இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது. நன்றி: தினமலர், 21/5/2017.   —-   ஷீரடி சாயிபாபா, ஹோவர்ட் மாபெட், அமராவதி வெளியீடு, பக். 112, விலை 80ரூ. ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றைப் படிக்க, மனதில் பரவசம் பொங்கிப் பெருகும். காலத்தை வென்ற மகான் இவர் என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை என்கிறது […]

Read more