மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில்

மகாபாரதம் – மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், பக்400, விலை ரூ.200. வேதவியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஓர் இதிகாசம். ஒவ்வொரு மனிதரும் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பிக்கிறது. நம்ப முடியாத பல சம்பவங்களும் கிளைக்கதைகளும் இதில் உள்ளன. மகாபாரதத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் இன்றைக்கும் நாம் பல உருவங்களில் காணமுடிகிறது என்பதுதான் வியப்பு. அதுமட்டுமல்ல, கலியுகத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதை அன்றைக்கே பட்டியலிட்டிருக்கும் வேதவியாசர் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான். துரியோதனனை தீயவன் என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் யுதிஷ்டிரனை முழுமையான […]

Read more

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில்

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், விலை 200ரூ. இந்தப் புத்தகத்தை எழுதிய சுரானந்தா, உண்மையில் மகாபாரதத்தை நன்கு ஆராய்ந்து, புதிய கோணத்தில் எழுதியுள்ளார். இடையிடையே தன் கருத்துக்களையும் சொல்கிறார். இதில் பல புதிய தகவல்கள் அடங்கியுள்ளன. சகுனி, பகடை உருட்டுவதில் வல்லவன். அதற்குக் காரணம் அவனுடைய அண்ணன், தான் இறப்பதற்கு முன்னதாக இரண்டு பெருவிரல்களையும் வெட்டித் தருகிறான். அவைதான் பகடைக்காய்களாக மாறி, வெற்றி தேடித்தருகின்றன. இப்படி சுவையான தகவல்கள் நிறைய உள்ளன. நன்றி: தினத்தந்தி, 08/11/2017

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தா, சுரா பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. 128 பக்கங்கள் மட்டுமே கொண்ட சித்தார்த்தா என்ற ஜெர்மானிய நாவல், 1946ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ், இந்தியாவில் கேரள மாநில சர்ச் ஒன்றில் பணியாற்றிய பாதிரியாரின் பேரன். இது புத்தரின் போதனைகளையும், இந்திய கலாசாரத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட நாவல். இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தன் பிராமண குடும்பத்தில் பிறந்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டாலும், அவன் மனம் […]

Read more