நந்திபுரத்து நாயகன்

நந்திபுரத்து நாயகன், டி.கே. இரவீந்திரன்,  விகடன் பிரசுரம், விலை 330ரூ. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனை மையமாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் தப்பிய நந்திவர்மன் இரண்டு ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களுடன் போரிட்டு வென்று மீண்டும் ஆட்சி பீடம் ஏறினான். இந்தக் கருவை மையமாகக் கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து விறுவிறுப்பான நாவலைப் படைத்துள்ளார் டி.கே. இரவீந்திரன். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. தமிழ்நாட்டை கி.பி. 300 முதல் கி.பி. 600 வரை களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று அறியப்படுகிறது. இந்த 300 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் வரலாறு எப்படி இருந்தது என்பதை அறியாத நிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கே இருந்து வந்தது. அதனால் அந்த காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ என்று வர்ணித்தனர். ‘வேள்விக்குடிச் செப்பேடு’ மூலமாக களப்பிரர் பற்றிய செய்திகளுக்கு விடை கிடைத்தது. அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் தமிழகத்தினுள் படையெடுத்த காலம், […]

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. களப்பிரர் காலத்தை ஏன் தமிழகத்தின் இருண்டகாலமாகக் கருதுகிறோம் என்ற கேள்வியை மையமாக்கியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. களப்பிரர்கள் சமண சமயத்தவர் அல்ல; பெளத்தர்கள் என பல இலக்கியச் சான்றுகள் மூலம் நிலை நிறுத்தியுள்ளார் நூலாசிரியர். அதேசமயம், வைதீக மதத்துக்கு அவர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும் வாதிடுகிறார். ஆனால், “களப்பிரரும் சமயங்களும்’‘ எனும் கட்டுரையில் சமண, பெளத்த சமயப் பிரசாரம் களப்பிரர் காலத்தில் தழைத்து வளர்ந்ததையும், சைவ, வைணவ சமய […]

Read more

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், டி.கே.இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக்.382, ரூ. 220. முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சமூகம், கலை, மொழி, இலக்கியம், அரசியல், நிர்வாகம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட மொகலாயப் பேரரசு, கி.பி. 1526 முதல், 1857 வரை சுமார் 330 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. வடஇந்தியாவிலும், தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் பகுதிகளிலும் அவர்களது ஆதிக்கம் நிலை பெற்றிருந்தது. மொகலாயர் காலக் கட்டடக் கலையின் சிறப்பை, தில்லி செங்கோட்டை, தாஜ்மகால், ஜும்மா மசூதி […]

Read more

பகதூர்கான் திப்பு சுல்தான்

பகதூர்கான் திப்பு சுல்தான், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 120ரூ. இந்தியாவில் தனது அரசை ஸ்தாபிக்க விரும்பும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர்கள், மைசூர் அரசின் மன்னர்கள் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும்தான். மராட்டியப் படைகளும், ஹைதராபாத் நிஜாம் படைகளும் ஆங்கிலப் படைகளுடன் கைகோர்த்துக் கொண்டபோதும் திப்பு சுல்தான் சமரசமாகப் போகாமல், தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை போராடுகிறான். திப்பு சுல்தானின் செயலின் விளைவுகள் இந்தியத்துவத்திலிருந்து விலகி மேனாட்டு நிலைக்கு உயர்வுடையதாக […]

Read more