தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 96, விலை 50ரூ. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது. தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது. அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, […]

Read more