ஈரம்

ஈரம் ; ஆசிரியர் : பூபதி பெரியசாமி, வெளியீடு: கவிஓவியா பதிப்பகம், விலை ரூ. 120/- வாழ்க்கை அனுபவங்களை கருவாக்கி, சிறுகதைகளாக புனைந்து தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 17 கதைகள் உள்ளன. பணம் தேடி, கணவன், மனைவி ஆளுக்கொரு திசையில் ஓட, வீடு அர்த்தமற்றதாகி, விடுமுறை தினத்தில் மட்டும், வேடந்தாங்கலாகும் சூழலை விளக்குகிறது, ‘அறுவை சிகிச்சை’ என்ற கதை.சமூக சேவை, சாமியாட்டம், அலைபேசி, முகநுால் என, பல கருக்கள் கதைகளில் வந்து கலகலப்பூட்டுகின்றன. – டி.எஸ்.ராயன். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள் ; ஆசிரியர் : சா. கந்தசாமி, வெளியீடு: சாகித்ய அகடமி, விலை ரூ. 290/- தமிழில் வெளிவந்த, 12 அறிஞர்களின் சுயசரிதங்களை ஆராய்ந்து அழகுடன் தொகுத்துள்ள நுால். காவியம், புராணம் எல்லாம் கனவில் மிதக்க வைக்கும். கதைகளில், இனிப்பான உண்மை இருக்கும்; சுயசரிதங்களில், கசக்கும் உண்மை இருக்கும். அவற்றை படிப்பதால், வெற்றி, தோல்வி கடந்த அனுபவமே மனதில் தங்கும். ஜெர்மனியில் கொடுங்கோலன் ஹிட்லர், மகள் ஆனிபிராங்குக்கு ஒரு டயரி பரிசளித்தார். அது, அவரது சுயசரிதை. டச்சு மொழியில் வெளிவந்து, பல கசக்கும் […]

Read more

ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள்

ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் ; ஆசிரியர் : சுஜாதா தேசிகன், வெளியீடு: லிட்டில் பீட் சர்வீசஸ் லிமிடெட், விலை ரூ. 130/- ராமானுஜரின் பக்தியின் மேன்மை பற்றி எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். இனிய அனுபவமாக உள்ளது. மூன்று பகுதிகள் உள்ளன. கடைசி பகுதி ஸ்ரீவேதாந்த தேசிகர் பற்றிய கட்டுரை. அவரின், 750வது திருநட்சத்திரம் அன்று, நுாலாசிரியருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் தொகுப்பு. அனைவரும் படித்து இன்புறத்தக்க ஆன்மிக நுால். – த.பாலாஜி. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030503_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை; ஆசிரியர். மு.நீலகண்டன், வெளியீடு: கனிஷ்கா புத்தக இல்லம், விலை ரூ. 200/- பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்ற அளவை வைத்துத்தான் ஒரு சமுதாயத்தை அளவிட முடியும்’ என்ற அம்பேத்கர் சிந்தனையை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நுால். பெண்ணிய விபரங்களை தொகுத்து வழங்குகிறது. இந்தியப் பெண்ணியச் சிந்தனையையும், குறிப்பாக, அதில் அம்பேத்கரின் பார்வையையும் ஆய்வு நோக்கில் கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. இப்போதுள்ள பெண்ணிய நிகழ்வுகள், உட்தலைப்புகளில் அழகாக தொகுத்து எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரையில், பெண்களின் நிலையை தெளிவுடன் எடுத்துரைக்கிறது. புத்தரின் […]

Read more

தொல்காப்பியம்

தொல்காப்பியம்; ஆசிரியர் ; புலியூர்க்கேசிகன்,வெளியீடு: ஜீவா பதிப்பகம், விலை ரூ. 400/- வடமொழிக்கு இலக்கண வரம்பை தெரிவிக்கும் நுால், பாணினீயம். இதற்கு முன்பாகவே, தமிழ் மொழிக்கு இலக்கண வரையறை தரும் நுாலான, தொல்காப்பியம் தோன்றிவிட்டது. வடவேங்கடம் முதல், தென்குமரிக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கை இணைத்து, இலக்கணம் கண்டவர் தொல்காப்பியர். இந்த நுாலுக்கு, இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையர் உட்பட பலர் உரை எழுதியுள்ளனர். அதில், இளம்பூரணரின் உரையைத் தழுவி புலியூர்க்கேசிகன் தெளிவான உரை எழுதி உள்ளார். […]

Read more

அறிவுரை கூறும் நெறிமுறை

அறிவுரை கூறும் நெறிமுறை  ஆசிரியர் : மெர்வின், வெளியீடு: மெர்வின் பதிப்பகம், விலை 100/- வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிமுறையை அறிவுரைத்துள்ள நுால். சந்திக்க வருபவர்களை, அன்பு, மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியத்தை அழகாக வலியுறுத்துகிறது. நன்மை, தீமையை அறிந்து, ஒரு செயலை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூறுகிறது. பிறருக்கு அறிவுரை கூறும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் உள்ளடக்கியது. – வி.விஷ்வா. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more