திருக்குறள் விளக்கம்

திருக்குறள் விளக்கம், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கி.குப்புசாமி முதலியார், சிவலாயம் வெளியீடு, பக்.1735, விலை 1800ரூ. உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளுக்கு, எண்ணற்ற விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன; இனியும் வரும். அவை அத்தனையும், மாற்றுக் குறையாத பரிமேலழகரின் உரைக்கு அடுத்த விளக்கமாகும். பரிமேலழகர், வைணவராக இருந்தாலும், சைவ நுால்களை நன்கு பயின்று தேர்ந்தவர். வட மொழியைக் கற்று கரை தேர்ந்த வித்தகர். திருக்குறளுக்கு அவரின் உரை, மாபெரும் கோவிலுக்கு தங்கக் கூரை வேய்ந்ததை போன்றது என்றாலும், அவரின் உரையும், விமர்சனங்களை சந்தித்தே வருகிறது. […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400. பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது. இந்நூலில் திருக்குறளின் […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கோ. வடிவேலு செட்டியார் இயற்றிய தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் (இரண்டு பாகங்கள்), பதிப்பாசிரியர் சிவாலயம் ஜெ. மோகன், வெளியீடு சிவாலயம், பக். 872+888 (இரு பாகங்கள்) விலை 1400ரூ. பரிமேலழகரை விளக்கிய வடிவேலு செட்டியார்! திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்களில், பரிமேலழகரே மிகுந்த சிறப்புடையவர் என்பது, அவரைத் திட்டுகின்றவர்களும் சேர்ந்து சொல்லுகின்ற முடிபாகும். ‘வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்’ எனப் பாராட்டப் பெறுபவர் அவர். மூலநூலாசிரியராகிய திருவள்ளுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டாடும் […]

Read more