துளிப்பா: நூறாண்டுகளில்

துளிப்பா: நூறாண்டுகளில்,  தொகுப்பாசிரியர்: இரா. சம்பத்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.200. ஜப்பானில் தோன்றிய குட்டிக் கவிதை வடிவமான ஹைக்கூ குறித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ஹைக்கூ பற்றி ஜப்பானிய கவிதை என்ற கட்டுரை மூலம் 1916-இல் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார். அதிலிருந்து ஒரு நூற்றாண்டுப் பயணம் என்கிற வகையில் இந்தத் தொகுப்பின் பெயர் அமைந்துள்ளது. இறையைப் பாடுவது, இயற்கையைப் பாடுவது, மனிதனைப் பாடுவது என்று எழுத்தில் எல்லாவற்றையும் கையாண்டு வந்துள்ளதை வரலாறு பூராவும் காணலாம். செய்யுள் வடிவிலே எழுதப்பட்டால்தான் எழுத்து […]

Read more

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை, தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்,சாகித்ய அகாதெமி,  பக்.225, விலை ரூ.110. கவிஞர் கா.மு.ஷெரீப் கவிதை, காவியம், சமயம், திரையிசைப் பாடல்கள், கலை, இலக்கியம், இலக்கணம், அரசியல், பத்திரிகை, தலையங்கம், உரைகள் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்; பல்துறைகளிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் . பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கட்சி போன்றவற்றில் முக்கிய பங்காற்றியவராகவும், தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலிய போராட்டங்களில் பங்கேற்றவராகவும் அவர் அறியப்பட்டாலும், அவருடைய திரையிசைப் பாடல்களான ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயில […]

Read more