பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும், இளங்கோ கிருஷ்ணன், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.80 பிரக்ஞையும் தன்மிதப்பும் இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிய இளங்கோ கிருஷ்ணன், காத்திரமான கவிஞராகவும் விமர்சகராகவும் விளங்குபவர். கவிதை வாசகர்களிடையே பேசப்பட்ட தொகுதிகளான ‘காயசண்டிகை’, ‘பட்சியன் சரிதம்’ நூல்களை அடுத்து ‘பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’ தொகுதியில் கவிதை வெளியீடு சார்ந்த சரளத்தை இளங்கோ கிருஷ்ணன் அநாயசமாக எட்டியுள்ளார். சத்தமான உரையாடலின் தொனியைக் கொண்ட இந்தக் கவிதைகளில் இளங்கோவின் குரல் கேட்கிறது. நகல் குரல்களும் போலிக் குரல்களும் பெருகியுள்ள நவீனக் […]

Read more

அரோரா

அரோரா, சாகிப்கிரான், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.100 அரோரா’ என்பதற்கு மூல அர்த்தம் வைகறை. சூரியனின் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உயர் வளிமண்டலத்தில் இருக்கும் அணுக்களோடு மோதுவதால் வட, தென் துருவப் பகுதிகளில் சிவப்பாகவும் பச்சையாகவும் வானில் ஏற்படுத்தும் கதிர்வீச்சு ‘அரோரா’ என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும் அதன் வழிகளும் தம்மிடமுள்ள புதிரை, சில வேளைகளில் மாற்று விடைகளை, மனிதன் வழியாக வெளியிடுகின்றன. அப்படி வெளியிடும் சிறந்த கலை ஊடகங்களில் ஒன்றாகக் கவிதை இருக்கலாம் என்று சாகிப்கிரான் கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. நிகழ்ச்சிகள், அனுபவங்கள், […]

Read more

தோட்டாக்கள் பாயும் வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி, ந.பெரியசாமி, புது எழுத்து வெளியீடு, விலை 70ரூ. மதுவாகினியின் சுவடுகள் பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்கள் மூலம் பெரியசாமி கட்டியெழுப்பும் காட்சிகள் அசாதாரணமானவை. இறந்தவர்களெல்லாம் பறவைகளாகிவிடும் மரணமற்ற ஊர், ஆசிரியரைக் கேலிச்சித்திரமாக்கும் சிறுமி. தற்கொலைக்கு முயல்கிறவனுக்குக் குழந்தைகளாகத் தெரியும் ரயில்பெட்டி, பசுவின் நிழலை வளர்ப்பவன், மேகத் துண்டைத் தலையணையாக்கும் சிறுவன், துணை வானத்தைச் சிருஷ்டிக்கும் சிறுமி, அக்டோபர் முதல்நாள் திக்விஜயம் செய்யும் காந்தி… என்று மாறுபட்ட காட்சிகள் வழியே பரந்துபட்ட தளத்தில் நமது வாசிப்பை சாத்தியப்படுத்துகிறார். […]

Read more

கடலில் வசிக்கும் பறவை

கடலில் வசிக்கும் பறவை, நிலாரசிகன், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டிணம் 635 112, விலை 60ரூ. யதார்த்தமும் மிகுபுனைவும் நிலா ரசிகன் நிலாவை மட்டும் ரசிப்பவர் அல்ல. பிரபஞ்சம் மொத்தத்தையும் மொழியில் ரசிக்க எத்தனிக்கிறார். 90களுக்குப் பிறகு தேவதைக் கதைகளாகவும், உருவக் கதைகளாகவும் கவிதைகளில் எழுதிப் பார்க்கும் போக்கு வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நிலா ரசிகனின் கவிதைகளைச் சொல்லலாம். கடலில் சிக்கும் பறவை தொகுப்பில் நிலா, எண்ணற்ற குட்டிக்கதைகளை உருவாக்குகிறார். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் நவீனக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் தனது […]

Read more