பெண் வாசனை

பெண் வாசனை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.260. பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு எல்லாம் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதையும், வாய்மொழிக் கதைகளில் இடம்பெற்றுள்ள தன்மையையும் எடுத்துரைக்கும் நுால். பொம்பளை சிரிச்சா போச்சு, பெண்புத்தி பின்புத்தி, உண்டி சுருங்கல் பெண்டிருக்கு அழகு, பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா? போன்ற பழமொழிகளையும், வேறு பலவற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார். விடுகதைகளை விளக்கும் இடத்தில் மேலோட்டமாகப் புரியும் பொருளையும், உள்ளார்ந்து உணர்த்தப்படும் பொருளையும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் உருவாக்கத்தில் உருவாகும் இந்த […]

Read more

வைரமுத்து வரை

வைரமுத்து வரை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1600ரூ. இமாலயச் சாதனை என்று பாராட்டும்வண்ணம் 1550 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரம்மாண்ட நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1931-ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய அத்தனைபேர் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு பாடல் எழுதியவரைக் கூட விட்டுவிடாமல், அனைவரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது. காலவரிசைப்படி, ஒவ்வொரு பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, அவர் எழுதிய பாடல் வரிகளில் காணப்படும் […]

Read more