என்றென்றும் சுஜாதா

என்றென்றும் சுஜாதா, அமுதவன், விகடன் பிரசுரம், பக். 184, விலை 90ரூ. சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி, அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி. எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை. நூலாசிரியர் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியவர். அந்த நாட்களில் படிப்படியான அவரது வளர்ச்சியை மகிழ்ச்சியை சில நேரங்களில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை உடனிருந்து பகிர்ந்து கொண்டவர். சுஜாதா தொடர்பான பல வெளியே வராத மிகச் சுவையான தகவல்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். -கேசி. நன்றி: தினமலர், 27/4/2014. […]

Read more