என்றென்றும் சுஜாதா

என்றென்றும் சுஜாதா, அமுதவன், விகடன் பிரசுரம், பக். 184, விலை 90ரூ.

சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி, அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி. எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை. நூலாசிரியர் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியவர். அந்த நாட்களில் படிப்படியான அவரது வளர்ச்சியை மகிழ்ச்சியை சில நேரங்களில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை உடனிருந்து பகிர்ந்து கொண்டவர். சுஜாதா தொடர்பான பல வெளியே வராத மிகச் சுவையான தகவல்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். -கேசி. நன்றி: தினமலர், 27/4/2014.  

—-

மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல், த. ஜீவானந்தம், சுருதி வெளியீட்டகம், சென்னை, பக். 156, விலை 100ரூ.

பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடியான காரல் மார்க்ஸ் எழுதிய அரிய நூல் மூலதனம். உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல். மூலதனத்தை எழுதிய கார்ல் மார்க்ஸே தனது நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில் நூலின் முதல் அத்தியாயமான சரக்குகளின் பகுப்பாய்வைப் புரிந்து கொள்வதில் வாசகர்களுக்குச் சிரமம் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பொருளாதாரம் சார்நத் விஷயங்களை மார்க்ஸின் மூலதனம் அதிகமாக விளக்குகிறது. சக்கு என்றால் என்ன? பரிவர்த்தனை என்றால் என்ன? மூலதனம் என்றால் என்ன? கூலி என்றால் என்ன? உழைப்புச் சக்தியை தொழிலாளி, முதலாளிக்கு விற்பதன் மூலம் உபரி மதிப்பு எப்படி உருவாகிறது? தொழிலாளியின் உபரி மதிப்பு எப்படி மூலதனமாக உருமாறி, மீண்டும் தொழிலாளியைச் சுரண்ட முதலாளிக்குப் பயன்படுகிறது? இந்த முதலாளிய உற்பத்திமுறையே ஒரு கட்டத்தில் எவ்வாறு தனது அழிவைத் தானே தேடிக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் மார்க்ஸ் தனது மூலதனத்தில் விளக்கியிருக்கிறார். மார்க்ஸின் மூலதனத்தில் உள்ளவற்றை எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் நூல். நன்றி: தினமணி, 21/4/2014.

Leave a Reply

Your email address will not be published.