கழிசடை
கழிசடை, அறிவழகன், அலைகள் வெளியீட்டகம், விலை: ரூ.160 உண்மையில் யார் கழிசடைகள்? தூய்மைப் பணியாளர்கள் ‘கடவுளாகக் கருதப்படும்’ இந்த கரோனா காலத்தில், ‘கழிசடை’ (2003) நாவல் மறுவாசிக்கப்பட வேண்டியதாகிறது. மலத்தோடும் சாக்கடைகளோடும் குப்பைகளோடும் குடும்பம் குடும்பமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது ஓர் இனம். இவர்களைப் பற்றி, அனுமந்தய்யா எனும் துப்புரவுத் தொழிலாளர் பார்வையில் ‘கழிசடை’ நாவலைப் படைத்தார் அறிவழகன். கழிசடைகளாகவும் ஈனப் பிறவிகளாகவும் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி இந்த நாவல் அழுத்தமாகப் பேசுகிறது. “தீண்டப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கம்பீரமாக ஒலிக்கும் பெயர்களை வைப்பது குற்றம்; […]
Read more